Tuesday, April 1, 2014

தமிழுக்கு மயங்கிய விநாயகர்

விநாயகப் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார் அவ்வைபிராட்டி. அந்த சமயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமானும் ஆகாய மார்க்கமாக திருக்கயிலாயத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும், அவ்வையையும் தன்னுடன் வருமாறு அழைத்தனர்.
http://aanmeegamarivom.blogspot.in/
அனைத்திற்கும் ஆதியாக விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் தலத்திற்குச் செல்ல யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆகையால் விநாயகரின் பூஜையை விரைந்து முடிக்க எண்ணினான் அவ்வை. விநாயகப்பெருமானோ, 'அவ்வையே என் மேலான வழிபாட்டை நீ மெதுவாகவே செய்!
http://aanmeegamarivom.blogspot.in/
சுந்தரருக்கும், சேரனுமானுக்கும் முன்னதாகவே, உன்னை நான் திருக்கயிலாயம் கொண்டு சென்று சேர்ப்பேன்' என்று உறுதியளித்தார். அப்போது அவ்வைபிராட்டி, 'சீதக்களபச் செந்தாமரைப்பூம், பாதச் சிலம்பும் பல இசை பாட' என்ற விநாயகர் அகவலைப் பாடி பொறுமையாக ஆனை முகனை ஆராதனை செய்தார்.

அவ்வையின் அமுதத் தமிழ் மொழியில் மயங்கிப் போன விநாயகர், அவரது வழிபாடு முடிந்ததும் தனது துதிக்கையால் அவ்வையை தூக்கிச் சென்று, சுந்தரர், சேரமான் இருவருக்கும் முன்பாகவே திருக்கயிலையில் சேர்த்தார்.Ganesan Pondicherry

ஏழு பெண் தேவதைகள்

தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களில் எண்ணற்ற எல்லை தெய்வங்கள் உண்டு. அவற்றின் வரலாறுகளும் சிறப்புகளும் மெய்சிலிர்க்கச் செய்பவை. கேட்கக் கேட்கத் திகட்டாத அந்த கிராம தெய்வங்கள் கதைகளில், ஏழு பெண் தெய்வங்களின் கதை பிரசித்தி பெற்றது. அவற்றில் ஒரு சுவைமிக்க வரலாறு இங்கே...

பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாமல் பெற்றோர் தவிக்க, அந்த ஏழு கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து, தங்கள் பெற்றோரின் கவலையைப் போக்குமாறு சிவபெருமானை வேண்டினர்.

அவர்கள் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண்களைத் தழுவ முயன்றார். "யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே' என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியொளிந்தனர்.

இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள். மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து, "''உனக்கு ஏது இந்தக் குழந்தை?'' எனக் கேட்டனர்.

அதற்கு காத்தாயி, "''பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை'' என்றாள். ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. ``என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே.

நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அழுதபடி கேட்டாள். ``நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்`' என்றனர் மற்ற சகோதரிகள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவபெருமான், "இவையெல்லாம் என் திருவிளையாடல்களில் ஒன்று. நீங்களெல்லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள்.

மக்களும் உங்களையே முதன்மைப்படுத்துவார்கள். உங்களுக்கு ஏவலர்களாக காவலர்களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்'' என்றருளி மறைந்தார்.

அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள். சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன், புலியூர் பட்டத்தாள், காளிங்கராய நல்லூர் அருந்தவம், வ. சித்தூர் பூவாள், குமாரை பச்சையம்மன், வெங்கனூர் மறலியம்மன் என்னும் காத்தாயி, அரகண்ட நல்லூர் பூங்காவனம் ஆகியோரே அந்த ஏழு தெய்வங்கள்.

இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன. இந்த ஏழு ஊர்களிலும் இந்த ஏழு அம்மன்களின் ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த ஏழு ஊர்களில் மட்டுமல்ல; மற்ற கிராமங்களிலும் தீமிதித் திருவிழா நடைபெற இதுவே காரணம் என்கிறார்கள்.

ஆடி மாதம் முதல் வெள்ளியன்று சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் கோவிலில் தீமிதி விழா தொடங்கும். அதற்கு அடுத்த வெள்ளி புலியூர் அம்மனுக்கும், அடுத்த வெள்ளி சித்தூர் அம்மனுக்கும், அடுத்த வெள்ளி குமாரை பச்சையம்மன் மற்றும் காளிங்கராய நல்லூர் அருந்தவத்திற்கும், அடுத்து வெங்கனூர் காத்தாயிக்கும், கடைசி வெள்ளி அரகண்ட நல்லூர் பூங்காவனத்தம் மனுக்கும் தீமிதித் திருவிழா நடக்கும்.

இப்படி வரிசையாக நடப்பது இங்கு மட்டுமே என்கிறார்கள். இந்த ஏழு கோவில்களையும் பச்சையம்மன் கோவில்கள் என்றே அழைக்கின்றனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடியிலிருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெருமுளை முத்தையா கோவிலும்; அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் குமாரை பச்சையம்மன், பூமாலையப்பர் கோவிலும்;

திட்டக்குடியிலிருந்து மேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தூர், வெங்கனூர் அம்மன் கோவில்களும்; திட்டக்குடியிலிருந்து தென்கிழக்கே வெள்ளாற்றைக் கடந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் காளிங்கராய நல்லூர் அம்மனும்; அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சன்னாசி நல்லூர் அம்மனும் கோவில் கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது அரகண்ட நல்லூர் அம்மன் கோவில்.

குலதெய்வத்திற்கு மஞ்சள் துணியில் காணிக்கை

குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம்.

சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

குலதெய்வத்தின் அருள் கிடைக்க

குலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு செல்வதும் கிடையாது.

எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகள் மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.

அய்யனார், கடலைமாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர்.

(உதாரணமாக ஊரைக் காக்க கள்ளர் அல்லது எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்கள் பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும். சில இடங்களில் அம்மாதிரி இன்றி பெருமாள் போன்றவர்களையும் குலதெய்வமாக வணங்குவதும் உண்டு.

ஆயிரம் பெருமாள் கோவில் இருந்தாலும் அம்மாதிரி குலதெய்வ கோவில்களுக்கு சென்று வணங்குவது முதல் சிறப்பு. சில இடங்களில் அம்மாதிரி இன்றி பெருமாள் போன்றவர்களையும் குலதெய்வமாக வணங்குவதும் உண்டு. பெருங்கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், இம்மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்.

பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே களை கட்டி பொங்கல், கிடா வெட்டு, பலி என்று அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும். ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலைத் திறந்து வழிபட்டு அதன் பின்னரே அந்த வேலையைத் துவங்குவார்கள்.

அதுவே முறையானதாகும். உங்கள் குலதெய்வத்தை வழிபடாதிருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள். குலதெய்வம் தெரியாதிருந்தால் ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள். சொல்லி விடுவார்கள். உங்க தாத்தா ஒங்கு குலச்சாமி வெட்டேரி கோவிலுக்கு போகாம எந்த காரியத்தை செஞ்சாரு அந்த காலத்துல என்று பெரும்பாலும் பட்டென்று பதில் வந்து விடும்.

தெரியவில்லை என்றாலும், பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும். இல்லாவிடில் உங்கள் ஜாதகத்தை அல்லது உங்கள் தந்தை ஜாதகத்தை ஜோதிடர் யாரிடமாவது காட்டி கேட்டால் உத்தேசமாக சொல்லி விடுவார்கள். ஐந்தாமிடம் அதன் அதிபதியை வைத்து திசை, குறிகளை சொல்லி விடுவார்கள். அதை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அந்த தெய்வத்திற்கென்று மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு நாளும் சிறப்பாக வழிபாடு நடக்கும். குல தெய்வத்திற்கென உள்ள வழிபாட்டு முறை மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள்.

உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணை, ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள். குலத்தைக் காப்பதால் தான் குலக்கடவுள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடையவேண்டும்.

பின்னோர் செழிக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உள்ளவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.

தலைவிதியை மாற்றும் பிரம்மதேவன்

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் திருப்பட்டூர் என்ற சிவ தலம் உள்ளது. சிறுகனூர் என்னும் சிறிய ஊரின் நடுவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இவ்வாலயத்தில் பிரம்மதேவர் மிக பிரம்மாண்டமான அமைப்புடன் நான்கு முகங்களுடன் மஞ்சள் அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

அனைவரின் தலையெழுத்தை எழுதும் பிரம்மதேவர், ஒருமுறை சிவபெருமானை சரணடைந்து, தனது கஷ்டங்களையும், தலை எழுத்தையும் மாற்றி அருளும்படி வேண்டிக்கொண்டார். அதற்காக அவர் தேர்வு செய்து சிவலிங்கத்தை வழிபட்ட தலம் இது என்று கூறப்படுகிறது.

தனது தலைவிதி மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆலயம் வந்து பிரம்மதேவனுக்கு மஞ்சள்பொடி சாத்தி, அர்ச்சனை செய்து கொண்டால் வியத்தகு அளவில் மாற்றம், முன்னேற்றம் நிச்சயம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. பரம்பொருளான சிவபெருமானை வணங்கிய பிறகே, பிரம்மதேவரை வழிபட வேண்டும்.

இந்த ஆலயத்தில் ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. பிரம்ம தேவர் வழிபட்ட 12 லிங்கங்கள் இந்த ஆலயத்தில் இருக்கின்றன. பெரும்பாலும் இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், குடும்பத்தினரின் ஜாதகத்தைக் கொண்டு வந்து பிரம்மாவின் திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர்.